சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மைப் பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வை சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் தில்லியில் நாளை நடத்துகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 29 SEP 2026 5:17PM by PIB Chennai

தொடர்ந்து நடைபெற்று வரும் தூய்மையே சேவை - 2026, இயக்கத்தின் ஒரு பகுதியாக , மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம், நாளை (30.09.2026) தில்லியில் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வின் கருப்பொருள் 'சுகாதாரப் பணியாளர்களின் சேவை, தூய்மையான இந்தியாவுக்கான உறுதிப்பாடு' என்பதாகும். இந்த நிகழ்வு, தூய்மைப் பணியாளர்களின் முக்கியப் பங்களிப்பை அங்கீகரித்து கௌரவிப்பதையும் , சுகாதாரம், பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அவர்கள் எளிதாகப் பெறுவதற்கு வழிவகை செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முகாம் நேரடியாகவும் காணொலி முறையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேரடி நிகழ்வானது புதுதில்லியில் உள்ள டாக்டர் எஸ்பிஎம் சிவிக் சென்டரில் நடைபெறும். அதே சமயம், நாடு முழுவதிலுமிருந்து உள்ளாட்சி அமைப்புகள் இணையவழியாகப் பங்கேற்கும்.

தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா தலைமை விருந்தினராகவும், மத்திய சமூக நீதி- அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு பி.எல். வர்மா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் இதில் பங்கேற்கவுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316548&reg=3&lang=1

----

TV/PLM/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2317052) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu