நிலக்கரி அமைச்சகம்
தூய்மைக்கான சிறப்பு இயக்கத்தை நடத்த நிலக்கரி அமைச்சகம் தயாராக உள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
29 SEP 2026 5:25PM by PIB Chennai
2026 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை, நிலக்கரி அமைச்சகம் அனைத்து நிர்வாக அலுவலகங்களிலும் சிறப்பு இயக்கம் 6-ஐ நடத்த உள்ளது. "கழிவிலிருந்து செல்வம்" என்ற தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, ஒரு மாதம் நீடிக்கும் இந்த முன்முயற்சியானது, அறிவியல் பூர்வமாக மின்னணுக் கழிவுகளை அகற்றுதல், பழைய பொருட்களை அகற்றுதல், அலுவலக இடங்களை உகந்த முறையில் பயன்படுத்துதல் பணியிடங்களை டிஜிட்டல் மயமாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். இது, நிலையான நிர்வாகத்தை வளர்க்கிறது.
விரிவான செயலாக்கத்தையும் தயார்நிலையையும் உறுதி செய்வதற்காக, அமைச்சகத்தின் சார்பில் முக்கிய ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம், நிலக்கரி அமைச்சகம் வலுவான நிறுவன வழிமுறைகளை வலுப்படுத்துவதற்கும், நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316556®=3&lang=1
-----
TV/PLM/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2317026)
வருகையாளர் எண்ணிக்கை : 6