மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

யுஐடிஏஐ சார்பாக கொல்கத்தாவில் ஆதார் குறித்த மாநாடு நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 29 SEP 2026 8:24PM by PIB Chennai

சேவை வழங்கலை மேம்படுத்தவும், ஆதார் பயன்பாட்டின் மூலம் வசதியை அதிகரிக்கவும், மக்களின் பொது நலனுக்குப் பங்களிக்கவும் தேவையான கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்காக, இந்திய தனித்துவ அடையாள ஆணையமான யுஐடிஏஐ இன்று தனது பங்குதாரர்கள் மாநாட்டை கொல்கத்தாவில் நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர்  திரு ஜிதின் பிரசாதா, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில்ஆதார் ஒரு மிக முக்கிய அங்கம் வகிப்பதாகக் கூறினார்.

"சேவை வழங்கலை மேம்படுத்துவதிலும், பரவலான நிதிச் சேர்ப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதிலும், அரசு நலத்திட்ட உதவிகள் தகுதியான மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதிலும் ஆதார் முக்கிய பங்காற்றியுள்ளது. நமது டிஜிட்டல் நிர்வாகத்தின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழும் ஆதார், அரசு சேவைகளைப் பெறும் முறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி, வெளிப்படைத்தன்மை, செயல்திறன், அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை ஆகியவற்றை உறுதி செய்துள்ளது," என்று குறிப்பிட்ட அமைச்சர், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப நம்மைத் தகவமைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316706&reg=3&lang=1

***

TV/BR/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2316886) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी