ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உத்தரப் பிரதேசத்தில் மீரட்- குர்ஜா-சஹரான்பூர் இடையே ரயில் சேவையை தொடர ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 29 SEP 2026 3:49PM by PIB Chennai

உத்தரப் பிரதேசத்தில் மீரட்-குர்ஜா-சஹரான்பூர் நகரகங்களுக்கு இடையே இரண்டு ரயில் சேவைகளை தொடங்க மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

குர்ஜா, மீரட் இடையேயான ரயில் சேவை குர்ஜா ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு மீரட் நகரில் மாலை 5.20 மணிக்கு சென்றடையும். மறு மார்க்கத்தில் மீரட் ரயில் நிலையத்தில் காலை 11.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மாலை 4.00 மணிக்கு குர்ஜா வந்தடையும். இந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த ரயில் நின்று செல்லும். இதன்மூலம் இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு போக்குவரத்து வசதி மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சஹரான்பூர் மீரட் இடையேயான ரயில் சேவை சஹரான்பூர் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மீரட் நகரை காலை 8.10 மணிக்கு சென்றடையும். மறு மார்க்கத்தில் இந்த ரயில் மீரட்லிருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு இரவு 8.40 மணிக்கு சஹரான்பூர் வந்தடையும்.

இந்த இரண்டு ரயில் சேவைகளும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு கூடுதல் பயண வாய்ப்புகளை வழங்குவதுடன் மீரட் நகரை மையமாக கொண்ட அந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2316493&reg=3&lang=1

***

SS/SV/PS/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2316673) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी