ஜல்சக்தி அமைச்சகம்
கிராமப்புற குடிநீர் விநியோக கட்டமைப்பு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு மத்திய நீர் வள அமைச்சகம் ஏற்பாடு
இடுகை இடப்பட்ட நாள்:
29 SEP 2026 2:43PM by PIB Chennai
மத்திய நீர் வள அமைச்சகத்தின கீழ் செயல்பட்டு வரும் குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை, கிராமப்புறங்களில் தூய்மையான குடிநீர் விநியோகம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி கிராமப்புற குடிநீர் விநியோக கட்டமைப்புகளின் செயல்பாடுகள், பராமரிப்பு குறித்து கிராம பஞ்சாயத்து அமைப்புகளின் பிரதிநிதிகள், உள்ளுர் சமுகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் நேரடியாக கலந்துரையாடுவதற்கான தளத்தை வழங்கியது.
ஜல் ஜீவன் இயக்கம் 2.0-ன் கீழ் சமூகம் சார்ந்த நீர் நிர்வாக நடைமுறைகளை உறுதி செய்வதில் மத்திய அரசின் அர்ப்பணிப்பை இது வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய குடிநீர் விநியோகம் மற்றும் துப்புரவுத் துறையின் செயலாளர் திரு அசோக் மீனா, கிராமப்புற குடிநீர் அமைப்புகளின் நிலைத்தன்மை, நீண்ட கால செயல்பாடுகளை உறுதிசெய்வதில் கிராமப்புற பஞ்சாயத்து அமைப்புகளின் பங்களிப்பை எடுத்துரைத்தார்.
கிராமப்புறங்களில் தூய்மையான குடிநீர் விநியோகம் குறித்த இத்தகைய கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் அடிப்படை அளவில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகத்தில் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கும் முக்கிய தளமாக அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2316459®=3&lang=1
***
SS/SV/PS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2316671)
வருகையாளர் எண்ணிக்கை : 9