நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
வெங்காய விலை வீழ்ச்சி எதிரொலி: மத்திய அரசின் கையிருப்பு வெங்காயம் கந்தா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கொல்கத்தாவுக்கு அனுப்பி வைப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
23 SEP 2026 4:29PM by PIB Chennai
மத்திய அரசு மேற்கு வங்கத்தில் வெங்காய விநியோகத்தை வலுப்படுத்தி வருகிறது. தனது கையிருப்பில் இருந்து வெங்காயத்தை ஏற்றிச் செல்லும் கந்தா எக்ஸ்பிரஸ் ரயில், 2026 செப்டம்பர் 24 அன்று கொல்கத்தாவை சென்றடையும். இது பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக, கொல்கத்தா, அதன் அருகிலுள்ள மாவட்டங்களில் வெங்காயம் எளிதில் கிடைப்பதை மேலும் வலுப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் சுமார் 1,400 மெட்ரிக் டன் வெங்காயம், வாகனங்கள் மூலம் கிலோ ஒன்றுக்கு ₹35 என்ற விலையில், பெரும்பாலும் சாலைப் போக்குவரத்து வாயிலாக ஏற்கெனவே விநியோகிக்கப்பட்டுள்ளது . கந்தா எக்ஸ்பிரஸின் வருகையால், கூடுதல் அளவிலான வெங்காயம் இனி விநியோகிக்கப்படும்.
இதுவரை, மத்திய அரசின் கையிருப்பில் உள்ள வெங்காயம் நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில், 17 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் சில்லறை வெங்காய விலை குறைந்துள்ளது.
கடந்த வாரத்தில் வெங்காய விலை சரிந்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் தமிழ்நாடு, தில்லி, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட்,ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், பீகார் ஆகியவை அடங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313926®=3&lang=1
***
TV/PLM/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2316634)
வருகையாளர் எண்ணிக்கை : 11