ஆயுஷ்
11-வது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, பாட்னாவில் உள்ள மண்டல ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறுதானியங்கள் குறித்த கண்காட்சி
இடுகை இடப்பட்ட நாள்:
23 SEP 2026 5:05PM by PIB Chennai
“ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான ஆயுர்வேதம்” என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்படும் 11வது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, பாட்னாவில் உள்ள மண்டல ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று (23.09.2026) பாரம்பரிய, சிறுதானிய உணவு உணவு கண்காட்சி நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி, ஆயுர்வேதம், பாரம்பரிய உணவுகள், சத்தான உணவுகள், சிறுதானியங்கள் மூலமான ஆரோக்கியமான வாழ்க்கை முறைப் பழக்கவழக்கங்கள் ஆகியவை குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றதன் மூலம், சத்தான, ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பழக்கவழக்கங்கள், ஆயுர்வேத அடிப்படையிலான ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை குறித்த விழிப்புணர்வு மேலும் மேம்படுத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313964®=3&lang=1
***
TV/PLM/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2316626)
வருகையாளர் எண்ணிக்கை : 9