நிதி அமைச்சகம்
ஆர்ஐஎன்எல் நிலத்திற்கான மின்னணு ஏலம்: விசாகப்பட்டினத்தில் என்எல்எம்சி முதலீட்டாளர்கள் கூட்டம் நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
23 SEP 2026 8:04PM by PIB Chennai
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நில பணமாக்கல் கழகம் (என்எல்எம்சி), விசாகப்பட்டினம் எஃகு ஆலையின் நிறுவனமான ராஷ்ட்ரிய இஸ்பத் நிகாம் லிமிடெட் (ஆர்ஐஎன்எல்) நிறுவனத்திற்குச் சொந்தமான 459 நிலப்பகுதிகளுக்கான வரவிருக்கும் மின்னணு ஏலம் குறித்து, அதில் பங்கேற்க ஆர்வமுள்ள ஏலதாரர்கள், பங்குதாரர்களுக்கு விளக்கமளிப்பதற்காக விசாகப்பட்டினத்தில் இன்று ஒரு முதலீட்டாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தது.
முதலீட்டாளர்கள் சந்திப்பில் என்எல்எம்சி, ஆர்ஐஎன்எல்-ன் உயர் அதிகாரிகளுடன், முதலீட்டாளர்கள், மேம்பாட்டாளர்கள், இதர பங்குதாரர்களும் பங்கேற்றனர். நில விவரங்கள், நிலங்களின் அமைவிடம் மற்றும் சிறப்பம்சங்கள், மின்னணு ஏல நடைமுறை, தகுதித் தேவைகள், பதிவு செய்யும் முறை, முன்பண வைப்புத்தொகை மற்றும் இதர விதிமுறைகள், நிபந்தனைகள் குறித்த விரிவான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை இந்தக் கூட்டம் வழங்கியது.
மின்னணு ஏலத்திற்கு முன்னதாக என்எல்எம்சி மேற்கொள்ளும் முதலீட்டாளர் தொடர்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முதலீட்டாளர் சந்திப்பு நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தைத் தொடர்ந்து, 2026 செப்டம்பர் 24 அன்று விஜயவாடாவிலும், 2026 செப்டம்பர் 25 அன்று ஹைதராபாத்திலும் முதலீட்டாளர் சந்திப்புகள் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2314146®=3&lang=1
***
TV/BR/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2316612)
வருகையாளர் எண்ணிக்கை : 11