பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடற்படை தளபதிகள் பங்கேற்கும் மாநாடு புதுதில்லியில் நடைபெறவுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 28 SEP 2026 5:15PM by PIB Chennai

கடற்படை தளபதிகள் பங்கேற்கும் மாநாடு புதுதில்லியில் நாளை (29.09.2026) தொடங்குகிறது. புதுதில்லியில் உள்ள நௌசேனா மாளிகையில் இம்மாதம் 29-ந் தேதி தொடங்கி அக்டோபர் 1-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. ஆண்டுக்கு இரண்டுமுறை நடைபெறும் இந்த மாநாட்டில் மூத்த கடற்படை தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

பாதுகாப்பு படையில் உத்திசார் செயல்பாட்டு தயார்நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்யவும், முறையான கட்டமைப்பு வசதிகள் மூலம் துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கும் ஒரு தளத்தை இம்மாநாடு வழங்குகிறது.

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்களுக்கிடையே எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட இந்தியாவின் கடல்சார் நலன்களை பாதுகாப்பதில் இந்திய கடற்படையின் பங்களிப்பு முன்னிலைப்படுத்துவதில் இம்மாநாடு முக்கியப்பங்கு வகிக்கிறது.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆப்ரேஷன் உர்ஜா நடவடிக்கையை கடற்படை திறம்பட மேற்கொண்டு வருவதன் மூலம், நம்பகமான கடல்சார் சக்தியாக இந்திய கடற்படை உருவெடுத்து வருவதுடன்  இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் திறம்பட செயலாற்றி வருகிறது.

இந்த மாநாட்டில், தொடர் அமர்வுகளில் கடற்படைத் தளபதி, தலைமைத் தளபதிகள் இணைந்து கடற்படையின் செயல்பாடுகள், தளவாடங்கள், மனிதவளம், பயிற்சி, செயற்கை நுண்ணறிவு போன்ற உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316045&reg=3&lang=1

 

***

TV/SV/PS/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2316598) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी