சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தேசிய நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பு இயக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
29 SEP 2026 1:18PM by PIB Chennai
நெடுஞ்சாலைகள், சுங்கச்சவாடிகளில் தூய்மை மற்றும் பராமரிப்பை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் 2026 அக்டோபர் 2 முதல் 31-ம் தேதி வரை சிறப்பு இயக்கம் 6.0-ஐ செயல்படுத்துவதில், மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஈடுபடவுள்ளது.
நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிப்பது, ஆவண மேலாண்மைப் பணிகளை வலுப்படுத்துவது, மின்னணு கழிவுகளை முறையான வகையில் அகற்றுவது போன்ற நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில், மத்திய சாலைப் போக்குவரத்து கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்களில் தூய்மைப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு இந்த இயக்கம் உதவிடும்.
தூய்மைப் பராமரிப்பிற்கான இந்த சிறப்பு இயக்கம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக 2026 செப்டம்பர் 15 முதல் 30 வரை அதற்கான தயார் நிலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்கான இலக்குகளை அடையாளம் காணுதல், பயன்பாடற்ற பொருட்களை அகற்றுதல் போன்ற பணிகள் அடங்கும். இரண்டாம் கட்டமாக 2026 அக்டோபர் 2 முதல் 31-ம் தேதி வரை தேசிய நெடுஞ்சாலைகளில், குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில் குப்பைகளை அகற்றுதல், சுங்கச்சாவடிகள், பிற இடங்களிலுள்ள கழிப்பறைகளை புதுப்பித்தல், பயன்பாட்டிலுள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்து பராமரித்தல், சுங்கச்சாவடிகளின் ஒட்டுமொத்த பராமரிப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2316423®=3&lang=1
***
SS/SV/PS/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2316562)
வருகையாளர் எண்ணிக்கை : 9