பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பழங்குடியினரின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவும், ஆவணப்படுத்தவும், மேம்படுத்துவதற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

இடுகை இடப்பட்ட நாள்: 29 SEP 2026 1:03PM by PIB Chennai

இந்தியாவின பன்முகத்தன்மை வாய்ந்த பழங்குடியின சமூகத்தின்  கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும், ஆவணப்படுத்துவதற்கும், டிஜிட்டல்மயமாக்குதல், ஆராய்ச்சி, மேம்பாடு, போன்றவற்றை செயல்படுத்துவதற்கும் 2026 செப்டம்பர் 28 அன்று மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அதிகாரம் பெற்ற அறக்கட்டளையான இந்திராகாந்தி தேசிய கலை மையமும், மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட பழங்குடியின மக்களின் பாரம்பரியத்தை முறையாக பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. மேலும், பழங்குடியினரின் கலைகள், இசை, மொழி, வாய்மொழி மரபுகள், நாட்டுப்புறக் கலைகள், கைவினைப்பொருட்கள், பழக்கவழக்கங்கள், பாரம்பரிய அறிவு ஆகியவற்றை ஆவணப்படுத்துவது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களும்  அதனை அறிய வகை செய்திடும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திருமதி ரஞ்சனா சோப்ரா கலாச்சார அமைச்சகத்தின் இத்தகைய முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்தியாவின் பழங்குடியினர் கலாச்சார மரபுகளை பாதுகாப்பதில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2316411&reg=3&lang=1

***

SS/SV/PS/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2316554) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali