ஜல்சக்தி அமைச்சகம்
ஜல் சக்தி அமைச்சகம் சார்பில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அணைகள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை
இடுகை இடப்பட்ட நாள்:
28 SEP 2026 4:59PM by PIB Chennai
மகாராஷ்டிராவில் உள்ள லொனாவாலா, புஷி அணைகள் பாதுகாப்பு மற்றும் அதன் தரத்தை உயர்த்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. நிர்வாகம், நிதித்துறை உறுப்பினர் சவுராப் அகர்வால் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சமீபத்தில் வெள்ளப்பெருக்கால், லொனாவாலா அணைப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. அதிகப்படியாக மழை பெய்யும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு, தகவல்தொடர்பின் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மழைக்காலத்தின்போது முன்னெச்சரிகையாக இருப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது. அணைகளை பாதுகாக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பொருட்டும், மரங்களை அதிகளவில் நடுவது குறித்தும் திட்டமிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஷிவா நகர் அணைக்கு நேரில் சென்ற தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள், அணை பாதுகாப்பு, பராமரிப்பு பணிகள், அணைக்கு அருகே வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து, அங்குள்ள ஊழியர்களிடம் எடுத்துரைத்தனர். மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சம் சார்பில் நீர்நிலைகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிபிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316038®=3&lang=1
***
TV/LN/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2316431)
வருகையாளர் எண்ணிக்கை : 11