சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பல்லுயிர் பாதுகாப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தேசிய உயிரியல் பூங்கா ஏற்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 27 SEP 2026 7:53PM by PIB Chennai

பல்லுயிர்ப் பெருக்கம் உயிரின ஆவணப்படுத்துதல், வனவிலங்கு பாதுகாப்புப் போன்றவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் மக்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு புதுதில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்கா ஏற்பாடு செய்திருந்தது.  இதன் ஒரு பகுதியாக வண்ணத்துப்பூச்சி, தும்பி போன்ற உயிரினங்களின் வகைப்பாடு குறித்து அறிந்துகொள்ளும் வகையில் நடைப்பயணம் நடைபெற்றது. காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பறவை நிபுணர் திரு ரோகித் சர்மா மற்றும் திரு ராம்வெர் ஆகியோர் வழிநடத்தினர்.

இந்த நிகழ்ச்சிக்கு பறவைகள், பட்டாம்பூச்சி  ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள், வனவிலங்கு புகைப்பட கலைஞர்கள், பல்லுயிர் பாதுகாப்பில் ஆர்வமுள்ள மக்கள் என பல்வேறு தரப்பினரிடமிருந்து உற்சாக வரவேற்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியில் தேசிய உயிரியல் பூங்கா இயக்குநர், அதிகாரிகள், வனத்துறை நிபுணர்கள் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்றவர்கள் 750-க்கும் மேற்பட்ட பறவை இனங்களைக் கண்டறிந்து அவற்றில் 47 பறவை இனங்களையும், 8 பட்டாம்பூச்சி இனங்களையும், 10 தும்பி வகைகளையும், 5 ஊசி தும்பி வகைகளையும் ஆவணப்படுத்தினர்.

பறவைகள், பட்டாம்பூச்சிகள், தும்பிகள் ஆகியவற்றின் சூழல் அமைப்புகள், அவற்றின் பண்புகள், பாதுகாப்புக் குறித்த முக்கியத்துவம் வாய்ந்தத் தரவுகளைத் துறைசார் நிபுணர்கள் பரஸ்பரம் பகிர்ந்துகொண்டனர். இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இயற்கையுடன் இணைந்து வாழ்வதற்கும், உயிரினங்களை அடையாளம் காணும் திறனை வளர்த்துக்கொள்வதற்கும், பல்லுயிர், வனவிலங்கு பாதுகாப்புக் குறித்த புரிதலுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315634&reg=3&lang=1

***

TV/SV/PS/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2316430) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी