சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
திமிங்கலம் உள்ளிட்ட கடல்சார் உயிரினங்களை பாதுகாப்பதற்கான அறிவியல் பூர்வ நடவடிக்கைகள் அவசியம்: இந்தியா வலியுறுத்தல்
இடுகை இடப்பட்ட நாள்:
28 SEP 2026 5:10PM by PIB Chennai
திமிங்கலம் உள்ளிட்ட கடல்சார் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச திமிங்கலம் மற்றும் கடல்சார் உயிரின பாதுகாப்பு ஆணையத்தின் கூட்டத்தில் கலந்துகொண்ட இந்தியப் பிரதிநிதிகள் இதனை வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆலோசனைக்கூட்டம் செப்டம்பர் 28-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் திமிங்கலம், செட்டோசியன் வகை உயிரினங்களை பாதுகாப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த வகை கடல்சார் உயிரினங்கள் பரவலாகக் காணப்படும் நாடுகள், அறிவியல் நிறுவனங்கள், அது சார்ந்த சர்வதேச அமைப்புகளுக்கிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தியா எடுத்துரைத்தது.
பாதுகாப்பு நடிவடிக்கைகளை வலுப்படுத்தவும், சரியான தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ளவும் இந்த வகை உயிரினங்களின் எண்ணிக்கை இடப்பெயர்வு, இனப்பெருக்க சூழலியல் மற்றும் அவை எதிர்கொள்ளும் அச்சுறுத்தலகள் தொடர்பான மேம்படுத்தப்பட்ட அறிவியல் பூர்வமான தரவுகளின் முக்கியத்துவம் குறித்தும் இந்தியா விரிவாக எடுத்துரைத்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316042®=3&lang=1
***
TV/SV/PS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2316225)
வருகையாளர் எண்ணிக்கை : 13