தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
2026 ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் அலைவரிசை இணைய சேவை சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
28 SEP 2026 4:55PM by PIB Chennai
மத்திய தொலைதொடர்பு துறை சார்பில், இந்தியாவில் இணைய சேவை தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்தவகையில், 2026 ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் அலைவரிசை இணைய சேவை சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2026 ஜூலை மாதத்தில் அலைவரிசை இணைய சேவை சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1094.48 மில்லியனாக இந்த நிலையில், 2026 ஆகஸ்ட் மாத தரவுகளின்படி 1101.21 மில்லியனாக உயர்ந்துள்ளது. மாத வளர்ச்சி விகிதம் 0.61 ஆக உயர்ந்துள்ளது. வாடிக்கையாளர்களை அதிகம் கொண்ட நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உள்ளது. இந்நிறுவனத்திற்கு 523.22 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதைத்தொடர்ந்து, பாரதி ஏர்டெல் நிறுவனத்திற்கு 374.96 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதற்கு அடுத்தடுத்த இடங்களில் வோடோபோன், பி.எஸ்.என்.எல் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316034®=3&lang=1
***
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2316222)
வருகையாளர் எண்ணிக்கை : 11