சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
தேசிய பட்டியலின நிதி, மேம்பாட்டு கழக நிதியுதவி மூலம் தொழில்முனைவராக உயர்ந்து சாதனை
இடுகை இடப்பட்ட நாள்:
28 SEP 2026 4:50PM by PIB Chennai
மகாராஷ்டிரா மாநிலம், தானேவில் உள்ள கல்வா பகுதியை சேர்ந்தவர் அங்குஷ் கரந்தே. சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆவல் கொண்ட இவர், தேசிய பட்டியலின நிதி மேம்பாட்டு கழகத்தின் மூலம் வழங்கப்படும் நிதியுதவி குறித்து கேள்விப்பட்டார். இதைத்தொடர்ந்து தொழில் தொடங்க விண்ணப்பம் செய்த நிலையில், 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிதியுதவி கிடைத்தது. இதை கொண்டு காலணி விற்பனையகத்தை தொடங்கினார். கடினமான உழைப்பின் காரணமாக அங்குஷ் கரந்தேவுக்கு மாதம் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் கிடைத்து வருகிறது. தக்க சமயத்தில் கிடைத்த நிதியுதவியால் தன்னுடைய வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். தொழில்முனைவராகும் கனவு நனவானதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316029®=3&lang=1
***
TV/LN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2316221)
வருகையாளர் எண்ணிக்கை : 12