சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
பொதுமக்கள் பங்களிப்புடன் புதுதில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க நடவடிக்கை: மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்
இடுகை இடப்பட்ட நாள்:
28 SEP 2026 2:54PM by PIB Chennai
புதுதில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைத்து, காற்றின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாறுபாட்டுத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் நடைபெற்றது. புதுதில்லி முதலமைச்சர் ரேகா குப்தா உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், குளிர்காலத்திற்குள் காற்றின் தரத்தை மேம்படுத்துவது கூறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் திரு.பூபேந்தர் யாதவ், அக்டோபர் 10-ம் தேதி வரையிலான ஆய்வின்படி, புதுதில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ள 37 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பொதுமக்களின் பங்களிப்புடன் காற்று மாசுபாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், புதுதில்லி, அதைச் சுற்றியுள்ள மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளைக் கவனத்தில் கொண்டுள்ளதாகவும் கூறினார். இது தொடர்பாக, அண்டை மாநிலங்களின் வேளாண்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியவும் குறிப்பிட்டார்.
புதுதில்லியில் காற்று மாசுபாட்டைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசிய முதலமைச்சர் ரேகா குப்தா, கட்டுமானப் பணிகளால் ஏற்படும் மாசைத் தடுக்க கண்காணிப்புக் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். காற்றின் தரத்தை உயர்த்த வாகனப் போக்குவரத்தில் கட்டுப்பாடு, பழைய பொருட்கள் எரிப்பதைத் தடுப்பது, மரங்கள் வளர்ப்பதை ஊக்குவிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2315941®=3&lang=1
***
TV/LN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2316189)
வருகையாளர் எண்ணிக்கை : 15