மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கும் - மத்திய மீன்வளத்துறை

இடுகை இடப்பட்ட நாள்: 28 SEP 2026 12:17PM by PIB Chennai

இந்தியா மீன்வள உற்பத்தியில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. 2024-25-ம் ஆண்டில், சரவதேச அளவில் மீன்வள உற்பத்தியில் இந்தியா 2-வது இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது. அதேசமயம் மீன் வளர்ப்பில் பல்வேறு சவால்களை, மீன் வளர்ப்பு விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். நோய்த் தாக்கம், வெள்ளம், பருவநிலை மாறுபாடு போன்றவற்றால் மீன் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, மீன் வளர்பை மேம்படுத்த மத்திய மீன்வளத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மீன் வளர்ப்போருக்கு காப்பீடு, ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

தகுதியுள்ளப் பயனாளிகளுக்கு 40 சதவீதம் உதவித்தொகை  வழங்கப்படுகிறது. குளம் சார்ந்த மீன் வளர்ப்புக்கு ஒரு ஹெக்டேருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை ஊக்கத்தொகையும், 4 ஹெக்டேர் வரை அதிகப்பட்சமாக 1 லட்சம் ரூபாய் வரையும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.   

மீன் வளர்ப்பிற்கான காப்பீட்டுக் கட்டணங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது மட்டுமின்றி, தன்னிறைவுபெற்ற மீன் சந்தையை உருவாக்கவும் மத்திய மீன்வளத்துறை திட்டமிட்டுள்ளது. மீன் வளர்போர் முறைசாரா நிறுவனங்களிடம் அதிக வட்டிக்குப் பணம் வாங்கித் தொழில் செய்வதால் அவர்கள் கடும் நிதிச்சுமையை சந்திக்கின்றனர். மீன் வளர்க்கும் விவசாயிகளை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், வெளிப்படைத் தன்மையுடன் அவர்களுக்கு ஊக்கத்தொகை, காப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315847&reg=3&lang=1

***

TV/LN/SH  


(வெளியீட்டு அடையாள எண்: 2316184) வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali