விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மை, மக்கள் பங்களிப்பை ஊக்குவிக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஏற்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 26 SEP 2026 2:42PM by PIB Chennai

“தூய்மைப் பணிகளில் பங்கேற்பு – தூய்மை இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா” என்ற கருப்பொருளில், தூய்மையே சேவை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, 2026 செப்டம்பர் 24 அன்று தூய்மைப் பணிகளுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஹிசாரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்–எருமைகள் குறித்த மத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

​இந்த நிகழ்ச்சி, ஒப்பந்தப் பணியாளர்கள், இளம் தொழில்முறை வல்லுநர்களிடையே தூய்மை, விழிப்புணர்வு ஆகியவற்றின் மீதான பங்கேற்பை ஊக்குவிப்பதையும், அதே நேரத்தில், பணியிடங்களில் தூய்மை, சுகாதாரப் பராமரிப்பை ஊக்கப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

​வழக்கமான கருத்தரங்கு அடிப்படையிலான நிகழ்ச்சிக்கு மாற்றாக, பங்கேற்பாளர்கள் தங்களது வீடுகள், பணியிடங்கள், சுற்றுப்புறப் பகுதிகளில், நடைமுறை சார்ந்த தூய்மை தொடர்பான பிரச்சனைகள் குறித்த அனுபவங்கள், கணிப்புகள், ஆலோசனைகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள இந்தக் கலந்துரையாடல் ஊக்குவிக்கிறது.

​பொது இடங்களில் குப்பைகளை வீசுவதைத் தடுத்தல், பொறுப்பான முறையில் கழிவுகளை அகற்றுதல், நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்து, முறையாகப் பயன்படுத்துதல், கழிவுகளைத் தரம் பிரித்தல், நீடித்த தூய்மைப் பழக்கங்களைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றில் இந்த நிகழ்ச்சி கவனம் செலுத்தியது.

​மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315272&reg=3&lang=1

****

SS/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2315329) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी