பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு தூய்மை இயக்கம் 6.0 ஆயத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மத்திய அமைச்சகங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 26 SEP 2026 10:26AM by PIB Chennai

நிர்வாகச் சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையை ஒருங்கிணைப்புத் துறையாகக் கொண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட சிறப்பு தூய்மை இயக்கம் 6.0-ன் ஆயத்தப் பணிகள் உத்வேகம் பெற்றுள்ளன.

​இந்த இயக்கத்தின் ஆயத்தப் பணிகள் 2026 செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெறுகின்றன. அதனைத் தொடர்ந்து, சிறப்பு தூய்மை இயக்கத்தின் முதன்மைச் செயல்பாடுகள் 2026 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை நடைபெறவுள்ளன.

​இந்தச் சிறப்பு இயக்கத்திற்கான ஆயத்தப் பணிகளில், மத்திய அமைச்சகங்கள் / துறைகள், அது சார்ந்த இணை / துணை அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகளில் உள்ள அலுவலகங்களுக்கு ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமித்து, இயக்கத்தின் பணிகள் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.

​களப்பணியாளர்களை ஒருங்கிணைத்தல், நிலுவையில் உள்ள விவகாரங்களைக் கண்டறிதல், தூய்மை இயக்கத்திற்கான அலுவலகங்களின் பட்டியலை இறுதி செய்தல், அகற்றப்பட வேண்டிய மின்னணுக் கழிவுகளின் அளவை மதிப்பிடுதல், அவற்றை அகற்றுவதற்கான நடைமுறைகளை இறுதி செய்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகள் இதில் அடங்கும்.

​மேலும், பணியிடங்களை மேம்படுத்துதல், மின்னணுக் கழிவு அகற்றும் நடைமுறைகள், கழிவிலிருந்து செல்வம் உருவாக்கம், கோப்பு மேலாண்மை நடைமுறைகள் (தேவையற்ற கோப்புகளை நீக்குதல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோப்புகளைப் பாதுகாத்தல்) ஆகியவற்றுக்கான திட்டங்களும் வகுக்கப்பட்டன.

​மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315219&reg=3&lang=1

****

SS/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2315304) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati