பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற குல்வீர் சிங்கிற்குப் பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
25 SEP 2026 9:15PM by PIB Chennai
ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவருக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற குல்வீர் சிங்கிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்துத் தெரிவித்தார். இந்தப் போட்டியில் ஏற்கனவே வெண்கலப் பதக்கம் வென்றிருந்த அவர், தற்போது மீண்டும் பதக்க மேடையில் ஏறி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அவரது சிறப்பான செயல்பாட்டைப் பாராட்டிய பிரதமர், அவரது விடாமுயற்சியும் முன்னேற்றமும் இந்தியா முழுவதும் உள்ள இளம் ஓட்டப்பந்தய வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டதாவது:
"ஐச்சி-நகோயாவில் முன்னர் வெண்கலம், இப்போது வெள்ளி! ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வெற்றி மேடையில் குல்வீர் சிங் தொடர்ந்து நம்மைப் பெருமைப்படுத்துகிறார்!
ஆடவருக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு வாழ்த்துகள். அவரது விடாமுயற்சியும் முன்னேற்றமும் இந்தியா முழுவதும் உள்ள இளம் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர்களுக்கு ஊக்கமளிக்கும்."
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2315161®=3&lang=1
****
SS/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2315183)
வருகையாளர் எண்ணிக்கை : 10