கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உத்தரப் பிரதேசத்தில் பாரத் டாக்ஸி சேவை துவக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 23 SEP 2026 6:31PM by PIB Chennai

மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சர் திரு முரளிதர் மோஹோல், லக்னோவில் இன்று பாரத் டாக்ஸி சேவையைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். லக்னோவுடன் இணைந்து, கோரக்பூர், வாரணாசி, கான்பூர், பிரயாக்ராஜ் ஆகிய நகரங்களிலும் இந்தச் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், துணை முதலமைச்சர் திரு பிரஜேஷ் பதக், மாநில அமைச்சர்கள், அதிகாரிகள், பாரத் டாக்ஸி ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வின்போது, ​​விமான நிலைய ஆணையம், லக்னோ மெட்ரோ ரயில், லக்னோ காவல்துறை ஆகியவை பாரத் டாக்ஸியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டன.

நிகழ்ச்சியில் பேசிய திரு மோஹோல், "ஓட்டுநரே உரிமையாளர்" என்ற முக்கியக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட, ஒரு முக்கியமான புதிய கூட்டுறவு முயற்சி என்று இந்த சேவையைக் குறிப்பிட்டார். இந்த மாதிரியின் முக்கியத்துவத்தை விளக்கிய அவர், இதில் ஓட்டுநர் வெறும் சேவை வழங்குநராக மட்டுமின்றி, கூட்டுறவுச் சூழலியலின் ஒரு பங்குதாரராகவும் உரிமையாளராகவும் திகழ்கிறார் என்று கூறினார். ஓட்டுநர்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியைத் தரகுத் தொகையாகச் செலுத்தும் வழக்கமான முறைகளைப் போலன்றி, வருமானத்தின் மூலம் கிடைக்கும் அதிகபட்சப் பலன் நேரடியாக ஓட்டுநர்களுக்கே சென்றடைவதை பாரத் டாக்ஸி உறுதி செய்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2314086&reg=3&lang=1  

***

TV/BR/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2314365) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी