சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் கடனுதவி திட்டத்தின்கீழ் பொருளாதாரத்தில் உயர்ந்த ஆந்திர மாநில தூய்மை பணியாளர்

இடுகை இடப்பட்ட நாள்: 21 SEP 2026 4:34PM by PIB Chennai

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தூய்மை பணியாளர் கர்னதி சீனிவாச ராவ். விஜயவாடா நகராட்சியில் தூய்மைப் பணி மேற்கொண்டு வரும் இவர், பொருளாதார ரீதியில் மிகவும் சிரமமுற்று வந்தார். மாதம் 2,500 ரூபாய் ஊதியத்தில் பணியில் சேர்ந்த சீனிவாச ராவ், தற்போது 22,500 ரூபாய் ஊதியம் பெறுகிறார். குழந்தைகளின் கல்விச் செலவு, வீட்டுக்கான செலவு அதிகரித்துள்ள நிலையில், அவருடைய ஊதியம் போதுமானதாக இல்லை. இந்நிலையில், சுவச் உத்யாமி யோஜனா திட்டத்தின்கீழ், 31.25 லட்சம் ரூபாய் கடனுதவியாகவும், 18.75 லட்சம் ரூபாய் மானியமாகவும் பெற்று கழிவுகளை அகற்றும் வாகனத்தை வாங்கினார். இதன்மூலம் சீனிவாச ராவுக்கு கூடுதலாக மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் வருவாய் வருகிறது. இது தனது நிதிச்சுமையை குறைத்துள்ளதாக சீனிவாச ராவ் தெரிவித்தார். 

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313026&reg=3&lang=1

***

TV/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2314123) வருகையாளர் எண்ணிக்கை : 22
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu , Kannada