ஜவுளித்துறை அமைச்சகம்
ஜவுளி அமைச்சகத்தின் தூய்மையே சேவை 2026 பிரச்சாரம்
இடுகை இடப்பட்ட நாள்:
23 SEP 2026 12:28PM by PIB Chennai
அன்றாட வாழ்வில் தூய்மை, சுகாதாரம் ஆகியவற்றின் மீதான அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசின் ஜவுளி அமைச்சகம், நாடு முழுவதிலும் உள்ள அதன் அனைத்து நிறுவனங்களிலும், தூய்மையே சேவை 2026 பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இந்திய சணல் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், தூய்மை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ‘தூய்மையான பள்ளிக்கூடம், தூய்மைக்காக இளைஞர்கள்’ என்ற கருப்பொருளில், பல பள்ளிகளில் மாணவர்களிடையே போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்தியப் பருத்தி கழகத்தின் ஊழியர்கள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பூங்காக்கள், மைதானங்கள் போன்ற பகுதிகளில், தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.
இந்திய மத்தியக் குடிசைத் தொழில் கழக அலுவலகங்களில், தேவையற்றப் பொருள்கள், காட்சி அறையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, ஏலம் விடுவதற்காக வளாகத்தில் குறிப்பிட்ட இடத்தில் வைக்கப்பட்டன.
தேசிய சணல் வாரியத்தின் ஊழியர்கள், தூய்மை கருப்பொருள் சார்ந்த இடங்களில் சுயபடங்கள் எடுத்து, அவற்றை மிகுந்த ஆர்வத்துடன் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.
மேலும், தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தின் நொய்டா அலுவலகத்திலும், அதன் பிராந்திய அலுவலகங்களிலும், தூய்மையே சேவை இயக்கம் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313762®=3&lang=1
***
SS/KS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2314116)
வருகையாளர் எண்ணிக்கை : 5