உரங்கள் துறை
தூய்மையே சேவை இயக்கத்தில் ஊழியர்களை ஊக்குவிக்கிறது உரத்துறை
இடுகை இடப்பட்ட நாள்:
22 SEP 2026 5:54PM by PIB Chennai
நாடு தழுவிய தூய்மையே சேவை இயக்கம், 2026 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்தக் காலத்தில், நிறுவன முன்முயற்சிகளைச் சீரமைக்கவும், களத்தில் அதன் தாக்கத்தை அதிகரிக்கவும், உரத் துறையின் பொருளாதார ஆலோசகர் திரு குந்தல் சென்சர்மா தலைமையில் இன்று, (செப்டம்பர் 22, 2026) காலை 11 மணிக்கு ஒரு விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், உரத் துறை அதிகாரிகள், உரத் தொழில் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதிகள், அனைத்து உரப் பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள், கூட்டு முயற்சி/தனியார் உர நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த நிர்வாக அதிகாரிகள் உட்பட, இத்துறையைச் சேர்ந்த முக்கிய தரப்பினர் பங்கேற்றனர்.
தூய்மையான, பசுமையான, பொறுப்புமிக்க நிர்வாகச் சூழலை உருவாக்கும் நோக்கத்தில் செயல்படுத்தப்படும் தூய்மையே சேவை இயக்கத்தின் வெற்றியானது, ஊழியர்களின் திறன் வாய்ந்த பங்கேற்பைச் சார்ந்துள்ளது என உரத்துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2313571®=3&lang=1
***
TV/PLM/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2313982)
வருகையாளர் எண்ணிக்கை : 6