சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்திற்கான முன்முயற்சிகள், விளிம்புநிலை சமூகங்களிடையே தொழில்முனைவை ஊக்குவிக்கின்றன

இடுகை இடப்பட்ட நாள்: 22 SEP 2026 6:04PM by PIB Chennai

சமூக நீதி அதிகாரமளித்தல் அமைச்சகம், தனது பொருளாதார உள்ளடக்கப் பிரிவு மூலம், விளிம்புநிலை சமூகங்களுக்கான தொழில்முனைவு, வாழ்வாதார உருவாக்கம், மறுவாழ்வு ஆதரவு ஆகியவற்றை வலுப்படுத்தி வருகிறது.

அதன் முக்கிய முன்முயற்சிகளில், பட்டியல் வகுப்பினருக்கான மூலதன நிதி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மூலதன நிதி, விளிம்புநிலை தனிநபர்களுக்கான தொழில்முனைவுத் திட்டம் ஆகியவை அடங்கும்.

சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் பொருளாதார உள்ளடக்கப் பிரிவின் துணை தலைமை இயக்குநர் திருமதி பிரதிமா குப்தா கூறுகையில், பட்டியல் வகுப்பினருக்கான மூலதன நிதியத்தின் கீழ், மொத்தம் ₹750 கோடி நிதியுடன், ₹10 லட்சம் முதல் ₹15 கோடி வரையிலான கடனுதவி 4 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.

2014-15-ம் நிதியாண்டு முதல் 2025-26-ம் நிதியாண்டு வரை, பட்டியல் வகுப்பு தொழில்முனைவோர் வணிகங்களை நிறுவவும், உற்பத்தி நிறுவனங்களை உருவாக்கவும், வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் இந்த நிதியம் ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளது என்று அவர் கூறினார்.

சமூக நீதிக்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டைப் பொருளாதார உள்ளடக்கப் பிரிவு முன்னெடுத்துச் செல்கிறது என்று திருமதி பிரதீமா கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2313577&reg=3&lang=1

***

TV/PLM/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2313955) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी