கனரகத் தொழில்கள் அமைச்சகம்
இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தொழில்துறை ஒத்துழைப்பு:மத்திய அமைச்சர் எச்.டி.குமாரசாமி தலைமையில் பேச்சுவார்த்தை
இடுகை இடப்பட்ட நாள்:
22 SEP 2026 7:52PM by PIB Chennai
மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகுத் துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தொழில், ஆராய்ச்சி மற்றும் எரிசக்திக் குழு பிரதிநிதிகளுடன் புதுதில்லியில் பேச்சு நடத்தினார்.
தொழில்துறை வளர்ச்சி, தூய எரிசக்தி, மின்சார வாகனப் போக்குவரத்து, தொழில்துறை கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
2026 ஜனவரியில் நடைபெற்ற 16-ஆவது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுவதாக அமைச்சர் தெரிவித்தார். வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் மேலும் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகளை அவர் எடுத்துரைத்தார்.
வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள், மேம்பட்ட வேதியியல் மின்கலங்கள் உள்ளிட்டவற்றுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டங்கள், பிரதமரின் மின்சார வாகன இயக்கத் திட்டம் ஆகியவற்றையும் அமைச்சர் விளக்கினார். தூய எரிசக்தி மாற்றம், நிலையான போக்குவரத்து மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருதரப்பும் ஆர்வம் தெரிவித்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2313630®=3&lang=1
***
TV/VK/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2313839)
வருகையாளர் எண்ணிக்கை : 2