நிலக்கரி அமைச்சகம்
சிறப்பு தூய்மை இயக்கம் 6.0: 10 லட்சம் சதுர அடி பரப்பை தூய்மைப்படுத்த மகாநதி நிலக்கரி நிறுவனம் இலக்கு
இடுகை இடப்பட்ட நாள்:
22 SEP 2026 8:02PM by PIB Chennai
மகாநதி நிலக்கரி நிறுவனத்தின் அலுவலகங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு தூய்மை இயக்கம் 6.0-ன் கீழ் 10 லட்சம் சதுர அடிக்கும் அதிகமான பரப்பை தூய்மைப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த இயக்கத்தில் 6.12 லட்சம் சதுர அடி பரப்பில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இலக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சிறப்பு தூய்மை இயக்கம் 6.0, அக்டோபர் 2 முதல் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. தூய்மையை நிலைநாட்டுதல், பணியிடங்களை ஒழுங்குபடுத்துதல், பயன்பாடற்ற பொருட்களை அகற்றுதல், நிலுவைப் பணிகளைக் குறைத்தல், இடத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துதல் மற்றும் மின்னணுக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை முறையாக சேகரித்து பிரித்து அகற்றுதல் ஆகியவை இயக்கத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
மின்னணுக் கழிவுகளை அறிவியல் முறையில் மேலாண்மை செய்வதற்கு இந்த ஆண்டு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. பயன்பாடற்ற மின்னணுப் பொருட்களை கண்டறிந்து, வகைப்படுத்தி, வழிகாட்டுதல்களின்படி முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் தூய்மையான, பாதுகாப்பான மற்றும் ஒழுங்கான பணிச்சூழலை உருவாக்குவதுடன், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வையும் வலுப்படுத்த மகாநதி நிலக்கரி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2313633®=3&lang=1
***
TV/VK/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2313836)
வருகையாளர் எண்ணிக்கை : 2