ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மையே சேவை 2026 பிரச்சாரத்தை மத்திய ஜவுளி அமைச்சகம் முன்னெடுத்தது

இடுகை இடப்பட்ட நாள்: 22 SEP 2026 1:28PM by PIB Chennai

தினசரி வாழ்க்கையில் தூய்மை, சுகாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய பிரச்சாரமாக, தூய்மையே சேவை 2026-ஐ கடந்த 17-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை மத்திய ஜவுளி அமைச்சகம் கடைபிடிக்கிறது. தூய்மை ஒரு ஒருங்கிணைந்த முயற்சியாகவும் சமூக ஈடுபாட்டின் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. ஜவுளி அமைச்சகமும் அதனுடன் இணைந்த நிறுவனங்களும் அலுவலகங்கள், கல்வி நிறுவன வளாகங்கள்பொது இடங்களில் தூய்மைப் பணியில் ஈடுபடுகின்றன..    மாணவர்கள், உள்ளூர் மக்கள்,மூக அமைப்புகள் பங்களிப்புடன் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும். நமது வாழ்வில் தூய்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மத்தியக் குடிசைத் தொழில் கழகமும் தூய்மை விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நடத்துகிறது.. இயற்கை ஆற்றலை பயன்படுத்தவும்   நெகிழிப் பொருட்களைப் புறக்கணிக்கவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதாக ஜவுளித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313359&reg=3&lang=1

***

SS/MM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2313580) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी