பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா - மங்கோலியா இடையே கூட்டு ராணுவப் பயிற்சி உத்தராகண்டில் தொடங்கியது
இடுகை இடப்பட்ட நாள்:
21 SEP 2026 4:52PM by PIB Chennai
இந்தியா – மங்கோலியா இடையே ஆண்டுதோறும் நடத்தப்படும் கூட்டு ராணுவப் பயிற்சியின் 18-வது பகுதி உத்தராகண்ட் மாநிலம் பிதோராகரில் உள்ள வெளிநாட்டு பயிற்சி மையத்தில் இன்று தொடங்கியது. இப்பயிற்சி 2026 செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் இந்திய ராணுவம், மங்கோலியா ஆயுதப்படை சார்பில் தலா 45 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
சிறிய நகர்ப்புறம், மலைப்பிரதேசங்களில் ஏற்படும் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இருதரப்பு கூட்டு ராணுவத் திறனை மேம்படுத்துவது இப்பயிற்சியின் நோக்கமாகும்.
உத்திசார் செயல்பாடுகள், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல், ஒத்திகைகளை மேம்படுத்துதல், இருநாட்டு ராணுவத்தினருக்கிடையேயான ஒருங்கிணைந்த செயல்பாட்டு திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இப்பயிற்சியில் கவனம் செலுத்தப்படும். சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், அறைக்குள் நுழைந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், இணையப் பாதுகாப்பு பயிற்சி, ட்ரோன்கள், ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளின் பயன்பாடு உள்ளிட்ட செயல்முறைகள் இப்பயிற்சியில் இடம்பெறும். இந்த ஒத்திகைகள் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனை வலுப்படுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313046®=3&lang=1
***
TV/IR/PS/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2313519)
வருகையாளர் எண்ணிக்கை : 10