ஆயுஷ்
ஆயுஷ் அமைச்சகம் சார்பில் தொன்மையான பாரம்பரிய மருத்துவ முறையை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
21 SEP 2026 5:57PM by PIB Chennai
இந்திய மருத்துவம், ஹோமியோபதிக்கான மருந்தியல் ஆணையத்தின் கீழ், தொன்மையான, பாரம்பரியம்மிக்க சோவா-ரிக்பா மருத்துவ துறை இயங்கி வருகிறது. இந்த துறையின் முதல் ஆலோசனை கூட்டம், 2026 செப்டம்பர் 18-ம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இந்திய மருத்துவம், ஹோமியோபதிக்கான மருந்தியல் ஆணையத்தின் இயக்குனர் கொஸ்துபா உபாத்யாயா தலைமை வகித்தார். சோவா-ரிக்பா மருத்துவ நிறுவனங்களை சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், பாரம்பரிய மருத்துகளின் தரத்தை உறுதிப்படுத்துவது, சிகிச்சையை முறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பாரம்பரிய மருத்துவத்திற்கான மத்திய அரசின் ஒழுங்கு முறை சட்டத்திற்குள் சோவா-ரிக்பா மருத்துவ துறையை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாரம்பரிய மருத்துவ முறையை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2313118®=3&lang=1
***
SS/LN/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2313508)
வருகையாளர் எண்ணிக்கை : 4