ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜார்க்கண்டில் அணை பாதுகாப்புத் தயார்நிலை, குறித்து தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் ஆய்வு

இடுகை இடப்பட்ட நாள்: 15 SEP 2026 6:47PM by PIB Chennai

தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் நிர்வாகம், நிதிப் பிரிவு உறுப்பினரான திரு. சௌரப் அகர்வால் தலைமையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் நீர்வளத் துறை செயலாளருடன் செப்டம்பர் 8, 2026 அன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் குழுவில், மத்திய நீர்வள அமைச்சகத்தின், நீர்வளத் துறை மூத்த இணை ஆணையர் திரு. மனோஜ் குமார், தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் தொழில்நுட்பப் பிரிவு இயக்குநர் திரு. அமிதாப் மீனா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இக்கூட்டத்தில், 'அணை பாதுகாப்புச் சட்டம், 2021'-ன் அமலாக்கம்,  மாநிலத்தில், அணை பாதுகாப்பு நடவடிக்கைகளின் தற்போதைய நிலை  குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், அணை பாதுகாப்பு அமைப்பின் மாநில தலைவர்,  ஜார்க்கண்ட் மாநிலத்தின் நீர்வளத் துறை, எரிசக்தித் துறை, குடிநீர், சுகாதாரத் துறை ஆகியவற்றின் கீழ் உள்ள அணைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஜார்க்கண்டில் உள்ள குறிப்பிட்ட அணைகளுக்கான விரிவான அணை பாதுகாப்பு மதிப்பீட்டுப் பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

தனி அதிகாரம் கொண்ட நிபுணர் குழுவை விரைவாக அமைத்தல், அணைகளைப் பார்வையிடும் பணிகளை உரிய நேரத்தில் முடித்தல், மத்திய அணைப் பாதுகாப்பு ஆணையத்திடம் அறிக்கைகளை சமர்ப்பித்தல் ஆகியவற்றின் அவசியத்தை தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2310588&reg=3&lang=1    

***

TV/SV/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2313348) வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी