மருந்துகள் துறை
மருந்துத் துறை அலுவலகங்கள், தேசிய நிறுவனங்களில் தூய்மை இருவார விழா
இடுகை இடப்பட்ட நாள்:
15 SEP 2026 8:42PM by PIB Chennai
ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருந்துத் துறை சார்பில் செப்டம்பர் 1 முதல் 15-ம் தேதி வரை தூய்மை இருவார விழா கடைப்பிடிக்கப்பட்டது. பிரதமர் திரு. நரேந்திர மோடியின் “தூய்மையான பாரதம், ஆரோக்கியமான பாரதம்” என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்து, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தீவிரமாக பங்கேற்றனர்.
செப்டம்பர் 1-ம் தேதி மருந்துத் துறைச் செயலாளர் திரு மனோஜ் ஜோஷி, முன்னிலையில் அலுவலர்கள் தூய்மை உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களில் தூய்மை இயக்கங்கள் நடத்தப்பட்டன. இணைச் செயலாளர் திரு.அமன் சர்மா தலைமையில், புதுதில்லி ஜன்பத் பவன் தன்னார்வ முறையில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.
பழைய மற்றும் தேவையற்ற பொருட்கள், மரச்சாமான்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு, பழுதுபார்ப்பு, அகற்றுதல் மற்றும் முறையாக நிர்வகிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
7 தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் தூய்மை இயக்கங்கள் நடைபெற்றன. பேராசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். சில இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மக்கள் மருந்தகங்களிலும் தூய்மை இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2310670®=3&lang=1
***
TV/VK/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2313347)
வருகையாளர் எண்ணிக்கை : 16