வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஏப்ரல்–ஆகஸ்ட் காலத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 15.55 சதவீதம் அதிகரிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
15 SEP 2026 7:48PM by PIB Chennai
2026-27-ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், பொருட்கள் மற்றும் சேவைகள் இணைந்த இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 399.27 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் பதிவான 345.55 பில்லியன் டாலருடன் ஒப்பிடுகையில் 15.55 சதவீத வளர்ச்சியாகும்.
ஆகஸ்ட் 2026-ல் மொத்த ஏற்றுமதி 82.68 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 92.09 பில்லியன் டாலராகவும் இருந்தது. இது முறையே 25.41 மற்றும் 18.75 சதவீத வளர்ச்சியாகும். ஏப்ரல்–ஆகஸ்ட் காலத்தில் பொருட்கள் ஏற்றுமதி 215.91 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 363 பில்லியன் டாலராகவும் இருந்தன. இதனால் பொருட்கள் வர்த்தகப் பற்றாக்குறை 147.09 பில்லியன் டாலராக உள்ளது.
ஆகஸ்டில் இரும்புத் தாது, மின்னணுப் பொருட்கள், பெட்ரோலியப் பொருட்கள், கடல் உணவுகள், பொறியியல் பொருட்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி அதிகரித்தது. சேவைகள் ஏற்றுமதி 12.95 சதவீதம் வளர்ந்துள்ளது. ஆகஸ்டில் அமெரிக்கா, சிங்கப்பூர், ஸ்பெயின், சீனா, தான்சானியா ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதியும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஓமன், தைவான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதியும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2310636®=3&lang=1
***
TV/VK/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2313342)
வருகையாளர் எண்ணிக்கை : 12