சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மன உளைச்சலிலிருந்து புது உத்வேகம் வரை : லீனாவின் மீட்சிப் பயணம்
இடுகை இடப்பட்ட நாள்:
18 SEP 2026 4:59PM by PIB Chennai
சரியான நேரத்தில் வழங்கப்படும் சிகிச்சை, ஆலோசனை, தொடர்ச்சியான மறுவாழ்வு ஆதரவு ஆகியவை, தனிநபர்கள் போதைப்பொருள் சார்பிலிருந்து விடுபடவும், தன்னம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பவும், பயனுள்ள வாழ்க்கைக்குத் திரும்பவும் உதவும்.
மணிப்பூரின் இம்பால் மேற்கு பகுதியைச் சேர்ந்த 37 வயதான செவிலியர் லீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), போதைப்பொருள் தடுப்புக்கான தேசிய செயல் திட்டத்தின் கீழ், அங்குள்ள ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையமான ஸ்நேஹா பவனில் மறுவாழ்வு ஆதரவு பெற்று போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீண்டார். அவர் 2024 முதல் போதைப்பழக்கத்திலிருந்து விடுபட்டு, செவிலியர் விரிவுரையாளராகத் தனது பணியை மீண்டும் தொடங்கினார்.
கணவரிடமிருந்து பிரிந்த பிறகு, திருமதி லீனா தனிமை, நம்பிக்கையின்மை, கடுமையான மன உளைச்சலை அனுபவித்தார். தனது மன அழுத்தத்தைச் சமாளிக்கும் ஒரு வழியாக, அவர் படிப்படியாக போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளானார். செவிலியர் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தபோதிலும், அந்த போதைப்பழக்கம் அவரது வாழ்க்கையைப் பாதித்தது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து மீண்டு தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் அவர் உறுதியாக இருந்தார்.
2024 மே 9 அன்று, இம்பால் மேற்கில் உள்ள ஸ்நேஹா பவனில் லீனா சிகிச்சை ஆதரவைப் பெற்றார். அவருக்கு மருத்துவப் பராமரிப்பு, தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான வழிகாட்டுதல் ஆகியவை வழங்கப்பட்டன. அங்கு அவருக்கு வழங்கப்பட்ட சேவைகள், அவர் தனது கண்ணியத்தை மீட்டெடுக்கவும், உறவுகளை மீண்டும் கட்டியெழுப்பவும், தொழில்முறைத் திறன்களை மீண்டும் பயன்படுத்தவும் வழிவகுத்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312096®=3&lang=1
***
(Release ID : 2312096)
TV/PLM/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2313323)
வருகையாளர் எண்ணிக்கை : 21