எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்துக்கு பிம்ஸ்டெக் எரிசக்தி மையம் ஏற்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 18 SEP 2026 3:23PM by PIB Chennai

மத்திய மின் துறை அமைச்சகத்தின் ஆதரவின் கீழ், பிம்ஸ்டெக் எரிசக்தி மையம், 2026 செப்டம்பர் 14 முதல் 18 வரை பெங்களூருவில் மின்சாரத் துறையில் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் இறுதிப் பயன்பாடு ஆகியவற்றில் புதிய தொழில்நுட்பங்கள்” என்ற தலைப்பில் ஐந்து நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தை நடத்தியது.

இந்தப் பயிற்சித் திட்டம் 14 செப்டம்பர் 2026 அன்று, மத்திய மின்சார ஆணையத்தின் தலைவர் திரு. கன்ஷியாம் பிரசாத், மத்திய மின் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு பங்கஜ் குமார் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது .

இந்தியா, பூட்டான், இலங்கை, தாய்லாந்து ஆகிய பிம்ஸ்டெக் நாடுகளின் பங்கேற்பாளர்கள் இதில் நேரில் கலந்துகொண்டனர். அதே சமயம், பங்களாதேஷ், மியான்மர் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இணையவழியில் பங்கேற்றனர். வேகமாக வளர்ந்து வரும் மின்சாரத் துறையில் தொழில்நுட்பத் திறனை வளர்ப்பதற்கும், தேசிய அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் இந்த நிகழ்ச்சி ஒரு தளத்தை வழங்கியது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள், பசுமை ஹைட்ரஜன், திறன்மிகு மின்கட்டமைப்புகள், மேம்பட்ட மின்கட்டமைப்பு செயல்பாட்டுத் தொழில்நுட்பங்கள், மின் அமைப்புகளில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட மின்சாரத் துறையின் முக்கிய வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து இதில் ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311987&reg=3&lang=1

***

(Release ID : 2311987)

TV/PLM/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2313318) வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी