நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பல்வேறு இடங்களில் சுமார் 845 கிலோ தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல்

இடுகை இடப்பட்ட நாள்: 21 SEP 2026 7:44PM by PIB Chennai

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான தனது தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) நாடு முழுவதும்  மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளில், கணிசமான அளவிலான போதைப்பொருட்களையும், மனநலனைப் பாதிக்கும் பொருட்களையும் கைப்பற்றியுள்ளது. கஞ்சா, சரஸ், ஆம்பெடமைன் உள்ளிட்ட சுமார் 845 கிலோ தடைசெய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன், 'போதைப்பொருள் மற்றும் மனநலனைப் பாதிக்கும் பொருட்கள் சட்டம் (என்டிபிஎஸ்), 1985'-ன் கீழ் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

20.09.2026 அன்று, கோரக்பூர் ரயில் நிலையத்தில் ஜன் நாயக் எக்ஸ்பிரஸில் பயணித்த இரண்டு பெண் பயணிகளை டிஆர்ஐ அதிகாரிகள் இடைமறித்து, மறைத்துவைக்கப்பத்திருந்த சுமார் 6 கிலோ சரஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது. 1985 ஆம் ஆண்டின் என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல், 17.09.2026 அன்று போத் காயாவில்  நெல் உமியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 737 பொட்டலங்களில் அடைக்கப்பட்ட சுமார் 752.3 கிலோ கஞ்சா கண்டெடுக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.

 

11.09.2026 அன்று, டிஆர்ஐ, காரியாபந்த் வனத்துறையுடன் இணைந்து, ஒடிசாவின் மென்ட்ரி கிராமத்தில் நடத்திய சோதனையில், 3 சாக்குகளில் 25 பொட்டலங்களாக அடைக்கப்பட்டிருந்த சுமார் 48.5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், டிஆர்ஐ அதிகாரிகள் பகிர்ந்துகொண்ட உளவுத் தகவலின் அடிப்படையில், தாய்லாந்து மற்றும் வியட்நாமிலிருந்து வந்த நான்கு பயணிகளிடமிருந்து மும்பை மற்றும் பெங்களூரு சர்வதேச விமான நிலையங்களில் உள்ள சுங்கத் துறையினர் சுமார் 28 கிலோ உயர்தர கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர், நான்கு பயணிகளும் கைது செய்யப்பட்டனர்.

 

புதுதில்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், 15.09.2026 அன்று மேற்கொள்ளப்பட்ட மற்றொரு முக்கிய நடவடிக்கையில், தோஹா வழியாக துபாயிலிருந்து வந்த இந்தியப் பயணி ஒருவரிடம் டிஆர்ஐ  அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஒன்பது பொட்டலங்களில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 5.8 கிலோ எடையுள்ள கோகெய்ன் பறிமுதல் செய்யப்பட்டு அந்தப் பயணி கைது செய்யப்பட்டார்.

 

டிஆர்ஐ மேற்கொண்ட பல்வேறு தொடர் நடவடிக்கைகளில், மொத்தம் சுமார் 4.5 கிலோ எடையுள்ள ஆம்பெடமைன் வகை ஊக்கமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மூன்று நடவடிக்கைகளிலும் மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2313185&reg=3&lang=1

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2313268) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी