திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
ஹரியானா மாநிலத்தில் 7 தொழிற்பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்த 320 கோடி ரூபாய் ஒதுக்கீடு: தேசிய பணிக்குழு ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
21 SEP 2026 3:41PM by PIB Chennai
தொழிற்பயிற்சி நிறுவனங்களை நவீன மயமாக்குவதற்கான பிரதமரின் நிதியுதவி திட்டமான பிஎம்-சேது திட்டத்தின் கீழ், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், ஹரியானா மாநிலத்தில் உள்ள 7 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களை நவீனப்படுத்த மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை அமைச்சகத்தின் சார்பில் இயங்கும் தேசியப் பணிக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஜிண்டால் நவீன் அவ்சார் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம், தொழிற்பயிற்சி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், தொழிற்பயிற்சிக்கான நவீன உபகரணங்கள் வழங்குதல், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துதல் போன்றவை மேற்கொள்ளப்பட உள்ளன. தொழிற்பயிற்சி நிறுவனங்களின் தரத்தை உயர்த்துவதன் மூலம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312980®=3&lang=1
***
SS/LN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2313171)
வருகையாளர் எண்ணிக்கை : 6