சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மத்திய அரசின் கடன் உதவித்திட்டத்தின் கீழ், தொழில்முனைவராக உயர்ந்த மகாராஷ்டிர மாநில இளம்பெண்
இடுகை இடப்பட்ட நாள்:
21 SEP 2026 4:17PM by PIB Chennai
மகாராஷ்டிரா மாநிலம், தானேயில் உள்ள மேற்கு கல்யாண் பகுதியை சேர்ந்தவர் ஷலகா நகோட்கர். அழகு நிலைய தொழிலுக்கான பட்டயப் படிப்பு படித்துள்ள இவர், சொந்தமாக அழகு நிலையம் வைக்க முடியாத நிலையில் இருந்தார். அதிக வாடகை கொடுத்து அழகு நிலையம் வைக்க அவரிடம் போதிய நிதி இல்லை. இந்நிலையில், தேசிய பட்டியலின நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் தொழில் தொடங்க கடனுதவி வழங்குவதை அறிந்தார். இதைத்தொடர்ந்து, விண்ணப்பித்த ஷலகாவுக்கு 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது. இந்த தொகையை கொண்டு வீட்டில் சொந்தமாக அழகு நிலையம் வைத்தார்.
இதன்மூலம், தனக்கு மாதம் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த வருமானம் தனது குடும்பத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறினார். தேசிய பட்டியலின நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் வழங்கப்பட்ட கடனுதவியால், தனது வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளதுடன் தொழில்முனைவர் என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் ஷலகா பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313007®=3&lang=1
***
TV/LN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2313148)
வருகையாளர் எண்ணிக்கை : 12