குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மைப் பணி, குறைதீர் முகாம்களை முன்னெடுக்கும் சிறு, குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம்

இடுகை இடப்பட்ட நாள்: 21 SEP 2026 3:30PM by PIB Chennai

சிறு, குறுத் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் 2026 அக்டோபர் 2 முதல் 31-ம் தேதி வரை தூய்மைப் பணி, குறைதீர் முகாமை நடத்தத் திட்டமிட்டுள்ளது. சிறப்பு இயக்கம் 6.O திட்டத்தின்கீழ், முறையாகக் குப்பைகளைச் சேகரித்து அவைகளைத் தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக, பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட உள்ளது. மேலும், தூய்மை, மின்னணுக் கழிவுகள் அகற்றம், இட மேலாண்மை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகள், பிரதமர் அலுவலக வழிகாட்டுதல்கள், பொதுமக்களின் குறைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து தீர்வுகாணப்படும் என சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற சிறப்பு இயக்கத்தின் மூலம், பொதுமக்களின் 22,365 குறைகளுக்குத் தீர்வுகாணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312958&reg=3&lang=1

***

SS/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2313136) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी