தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

ஹரியானாவில் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த சிறுமி உயிரிழப்பு: தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை

இடுகை இடப்பட்ட நாள்: 18 SEP 2026 11:43AM by PIB Chennai

ஹரியானா மாநிலம் பல்வலில் தன் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி திறந்து கிடந்த கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தார். கடந்த 17-ம் தேதி கழிவுநீர் தொட்டிக்குள்  சிறுமி விழுந்ததும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், வரும் வழியிலேயே சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுமி இறந்த பிறகும் அந்த கழிவுநீர் தொட்டி  மூடப்படவில்லை என்று வெளியான ஊடகச் செய்திகளின் அடிப்படையில், இந்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. இச்சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை 2 வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு பல்வல் துணை ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311836&reg=3&lang=1

***

TV/MM/SM 


(வெளியீட்டு அடையாள எண்: 2313041) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: English , Punjabi , Gujarati , Urdu , हिन्दी