தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுப்பிக்கப்பட்ட குணா தலைமை தபால் நிலையத்தை மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 18 SEP 2026 11:49AM by PIB Chennai

மத்திய பிரதேச மாநிலத்தில் புதுப்பிக்கபட்ட குணா தலைமை தபால் நிலையத்தை மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களை நவீனமயமாக்கும் தபால் துறையின் முயற்சியின் கீழ், குணா தலைமை தபால் நிலையத்தின் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள், ரூ.38 லட்சம் செலவில் புது தில்லியில் உள்ள திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலைப் அமைப்பின் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. 

புதுப்பிக்கப்பட்ட தலைமை தபால் நிலையத்தில் பொது மக்கள் அஞ்சல் மற்றும் நிதி சார்ந்த சேவைகளை பெற நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட முறையிலான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புனரமைக்கப்பட்ட குணா தலைமை தபால் நிலையத்தை துவக்கி வைத்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தபால் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தொழில்நுட்ப விரிவாக்கம், பல்வேறு சேவைகளை பெற மக்கள் அடிக்கடி தபால் நிலையங்களுக்கு செல்ல வேண்டிய தேவையை குறைத்துள்ளதாக தெரிவித்தார்.

தாக் சேவா மற்றும் தாக் மித்ரா செயலிகள் மூலம், மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே பல்வேறு தபால் சேவைகளை எளிதில் பெறலாம் என்று அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311843&reg=3&lang=1

***

TV/ AC /SM 


(வெளியீட்டு அடையாள எண்: 2313033) வருகையாளர் எண்ணிக்கை : 26
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी