குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், 30 லட்சம் கைவினைஞர்கள் பதிவு செய்துள்ளனர்

இடுகை இடப்பட்ட நாள்: 16 SEP 2026 12:47PM by PIB Chennai

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் 2026 செப்டம்பர் 17 அன்று மூண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இதனையொட்டி, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் சார்பில், இதற்கான சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சி, பாரம்பரிய கைவினைஞர்கள், கைவினைத் தொழிலாளர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதையும், அவர்களின் வாழ்வாதாரம், தொழில்முனைவோர் திறன்களை வலுப்படுத்துவதையும்  நோக்கமாகக் கொண்டு, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கிறது.

மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி, அத்துறைக்கான இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்த்லாஜே, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் திரு சுவேந்து அதிகாரி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.

அடையாளம் காணப்பட்டுள்ள 18 வகையான பாரம்பரியத் தொழில்களில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்கள்,  கலைஞர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கும் நோக்கத்துடன், பிரதமர் திரு. நரேந்திர மோடி இத்திட்டத்தை 2023-ம் ஆண்டு செப்டம்பர் 17-அன்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள், நிர்ணயிக்கப்பட்ட மூன்று கட்ட சரிபார்ப்பு நடைமுறைகளை நிறைவு செய்த பிறகு 30 லட்சம் பயனாளிகள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகத்தால், 24.50 லட்சம் கைவினை கலைஞர்களுக்கு அடிப்படைத் திறன் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், 30 லட்சம் கைவினைஞர்கள் பதிவு செய்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310751&reg=3&lang=1

-----

TV/SV/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2312865) வருகையாளர் எண்ணிக்கை : 24
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Gujarati