நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிதிச் சேவைகள் துறை, சிறப்பு இயக்கம் 6.0-க்கு தயாராகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 16 SEP 2026 6:34PM by PIB Chennai

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதிச் சேவைகள் துறை, அதன் இணை அலுவலகங்கள், துணை அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிதி நிறுவனங்களுடன் இணைந்து, 2026 அக்டோபர் 2 முதல் நடைபெறவுள்ள சிறப்பு இயக்கம் 6.0-க்கு தயாராகி வருகிறது.

இதற்கு முன்பு 2025 அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெற்ற சிறப்பு இயக்கம் 5.0-ல் இலக்குகள் அனைத்தும் எட்டப்பட்டதுடன், நாடு முழுவதும் 41,000-க்கும் மேற்பட்ட இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு, கழிவுப் பொருட்களை அகற்றியதன் மூலம் ரூ.3.20 கோடி வருவாய் கிடைத்தது.

2025 நவம்பர் முதல் 2026 ஆகஸ்ட் வரை தூய்மை மற்றும் நிலுவைப் பணிகளைக் குறைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. இதில் 968 இடங்கள் மற்றும் அலுவலகங்கள் சுத்தம் செய்யப்பட்டன. 96,328 சதுர அடி இடம் மீட்கப்பட்டது. கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டதன் மூலம் ரூ.1,02,344 வருவாய் கிடைத்தது. மேலும், 14,590 பொதுமக்கள் குறைகளும், 3,987 மேல்முறையீடுகளும் தீர்க்கப்பட்டன.

சிறப்பு இயக்கம் 6.0-க்கான விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் கள அலுவலகங்களுக்கு காணொலி கூட்டங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் மூலம் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2311007&reg=3&lang=1

-----

TV/VK/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2312859) வருகையாளர் எண்ணிக்கை : 26
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी