தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குவாலியரில் தொலைத்தொடர்பு கருவிகள் உற்பத்தி மண்டலத்திற்காகத் தேர்வு செய்யப்பட்ட இடத்தை மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா ஆய்வு செய்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 SEP 2026 6:49PM by PIB Chennai

ஆசியாவின் முதல் தொலைத்தொடர்பு கருவிகள் உற்பத்தி மண்டலம் குவாலியரில் நிறுவப்படுவதால், இந்த நகரம் இந்தியாவின் தொலைத்தொடர்பு உற்பத்தித் துறைக்கான ஒரு முக்கிய மையமாக உருவெடுக்கும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். இன்று (20.09.2026) மத்திய தொலைத்தொடர்புத் துறை செயலாளர், பிற மூத்த அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து, குவாலியரில் தொலைத்தொடர்பு உற்பத்தி மண்டலத்திற்காகத் தேர்வு செய்யப்பட்ட இடத்தை அமைச்சர் ஆய்வு செய்தார்.

முன்மொழியப்பட்ட இந்த மண்டலம், சுமார் ₹5,500 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ளதுடன், 18,000-க்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

 

இந்தத் திட்டத்தால் குவாலியரில் 25 தொலைத்தொடர்பு உற்பத்தி நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு முழுமையான தொலைத் தொடர்பு சாதன உற்பத்தித் தொழில்துறை சூழலமைப்பு உருவாக்கக்படும் என்று அவர் தெரிவித்தார். இவை தொலைத்தொடர்பு உபகரணங்களையும் பல்வேறு உதிரிபாகங்களையும் உற்பத்தி செய்து இந்த நகரத்தின் நிலையை வலுப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

முதல் கட்டத்திற்காக 170 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும்

முதலீட்டாளர்களிடமிருந்து ஆர்வம் வெளிப்பட்டுள்ளதாகவும் திரு ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312743&reg=48&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2312775) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी