மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேற்கு வங்கத்தில் மீன்வளத் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் நாளை ஆய்வு செய்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 SEP 2026 3:41PM by PIB Chennai

மத்திய மீன்வளத் துறை, மேற்கு வங்கத்தில் மீன்வள மேம்பாடு குறித்த ஆய்வுக் கூட்டத்தை நாளை (2026 செப்டம்பர்) மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் ஏற்பாடு செய்துள்ளது. இக்கூட்டத்திற்கு மத்திய மீன்வளத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங்கும், மேற்கு வங்க முதலமைச்சர் திரு சுவேந்து அதிகாரியும் இணைந்து தலைமை வகிக்கின்றனர் . மேற்கு வங்கத்தில் மீன்வள மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும், மாநிலத்தில் இதுவரை பயன்படுத்தப்படாத பெரிய மீன்வள ஆற்றல் தொடர்பான செயல் திட்டத்தை வகுப்பதற்காகவும் இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், மத்திய மீன்வளத் துறை, மேற்கு வங்க மாநில மீன்வளத் துறை, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீன்வளத் துறை தொடர்பான அமைப்புகள், நபார்டு வங்கி, இந்திய கடலோரக் காவல்படை உள்ளிட்டவற்றின் அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312680&reg=48&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2312706) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati