ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய சர்வதேச தண்ணீர் வார நிகழ்வுகள் செப். 22-ம் தேதி தில்லியில் தொடங்கி வைக்கிறார் குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன்

இடுகை இடப்பட்ட நாள்: 20 SEP 2026 11:43AM by PIB Chennai

மத்திய ஜல் சக்தி அமைச்சகம், முக்கிய மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், சர்வதேச அமைப்புகள், ஆராய்ச்சி, கல்வி நிறுவனங்கள், தனியார் துறையினர் இணைந்து, “பருவநிலையைத் தாங்கும் நீர் மேலாண்மை” என்ற கருப்பொருளில், 9-வது இந்திய சர்வதேச தண்ணீர் வார நிகழ்வுகளை 2026, செப்டம்பர் 22 முதல் 26 வரை புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளன. இந்த ஐந்து நாள் சர்வதேச நிகழ்வானது,  நீர் தொடர்பான சவால்களை எதிர்கொள்வது குறித்து விவாதிப்பதற்கு, ஒரு பன்முகத் தளத்தை வழங்கும்.

தொடக்க விழா : இந்த நிகழ்வானது, 2026 செப்டம்பர் 22 அன்று, குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெறும்.

உலகளாவிய பங்கேற்பு: பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், கொள்கை வகுப்பாளர்கள், உலகளாவிய நீர் வல்லுநர்கள் இதில் பங்கேற்று, நீர் மேலாண்மையில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

தேசியப் பங்கேற்பு : 14 மாநிலங்கள் கூட்டு பங்கேற்பு மாநிலங்களாகப் பங்கேற்கும் அதே வேளையில், ஆறு மத்திய அமைச்சகங்களும் துறைகளும் கூட்டுப் பங்கேற்பு அமைச்சகங்களாகவும் துறைகளாகவும் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312634&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2312652) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Marathi , Gujarati