நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உள்ளீட்டு வரி வரவுகளில் மோசடி செய்த நிறுவனத்தின் உரிமையாளரை ஜிஎஸ்டி ஆணையரக வரி ஏய்ப்புத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்

இடுகை இடப்பட்ட நாள்: 18 SEP 2026 2:26PM by PIB Chennai

மோசடியான நடவடிக்கைகள் மூலம் உள்ளீட்டு வரி வரவுகளுக்கெதிரான தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தில்லி தெற்கு சரக சிஜிஎஸ்டி ஆணையரகத்தின் வரி ஏய்ப்புத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளரைக் கைது செய்துள்ளனர்.

இரும்பு, எஃகு பொருட்களை விற்பனை செய்து வரும் இந்த நிறுவனம், ரூ.140.14 கோடி மதிப்பிலான போலி விலைப்பட்டியல்களைப் பயன்படுத்தி ரூ.25 கோடிக்கும் அதிகமான அனுமதிக்கப்படாத உள்ளிட்டு வரி வரவை மோசடியாகப் பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

செயல்பாட்டில் இல்லாத அல்லது ஜிஎஸ்டி பதிவு ரத்து செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் பெயரில் வழங்கப்பட்டுள்ள விலைப்பட்டியல்களின் அடிப்படையில் மோசடியான முறையில் உள்ளீட்டு வரி வரவுகளை இந்த நிறுவனம் பெற்றிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் குறிப்பிட்ட வணிக முகவரியில் எவ்வித வர்த்தக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311941&reg=3&lang=1

***

SS/SV/PS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2312243) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Bengali , Telugu