பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உலக நாடுகளுக்கிடையே பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் கூட்டாண்மைகளை உருவாக்கும் இந்தியாவின் அணுகுமுறையை சுட்டிக்காட்டும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 SEP 2026 2:34PM by PIB Chennai

உலக நாடுகளுக்கிடையே பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் கூட்டாண்மைகளை உருவாக்குதல், அதேவேளையில் போட்டியிடும் சக்திகளுடனான உறவுகளைச் சமநிலைப்படுத்துதல், இந்தியாவின் உத்திசார்ந்த நலன்களை முன்னெடுத்தல் ஆகியவற்றில் பிரதமரின் வெளியுறவுக் கொள்கை எவ்வாறு கவனம் செலுத்துகிறது என்பதை விளக்கும், ஆர்பிஜி எண்டர்பிரைசஸின் தலைவர் திரு. ஹர்ஷ் கோயங்காவின் கட்டுரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். இந்தியாவின் கூட்டாண்மைகளை உருவாக்கும் அணுகுமுறைக்கு ஒரு உதாரணமாக, பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'புதுதில்லி பிரகடனத்தை' இக்கட்டுரை சுட்டிக்காட்டுவதாகத் திரு. மோடி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

"ஆர்பிஜி எண்டர்பிரைசஸின் தலைவர் திரு. ஹர்ஷ் கோயங்கா, பிரதமர் திரு நரேந்திர மோடியின் வெளியுறவுக் கொள்கை அணுகுமுறையானது உலக நாடுகளுக்கிடையே பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் கூட்டாண்மைகளை உருவாக்குவது, போட்டியிடும் சக்திகளுடனான உறவுகளைச் சமநிலைப்படுத்துவது, இந்தியாவின் உத்திசார் நலன்களை முன்னெடுப்பது ஆகியவற்றை உள்ளடக்கியது என்று எழுதியுள்ளார்.

இந்தியாவின் கூட்டாண்மைகளை உருவாக்கும் அணுகுமுறைக்கு ஒரு உதாரணமாக, பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'புதுதில்லி பிரகடனத்தை' அவர் சுட்டிக்காட்டுகிறார்."

***

(Release ID: 2311312)

TV/IR/GS/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2312205) வருகையாளர் எண்ணிக்கை : 10