ஜல்சக்தி அமைச்சகம்
குடிநீர் ஆதாரம் குறித்த மாவட்ட ஆட்சியர் நிலையிலான ஆய்வுக் கூட்டத்தை குடிநீர், சுகாதாரத் துறை நடத்தியது
இடுகை இடப்பட்ட நாள்:
15 SEP 2026 5:36PM by PIB Chennai
மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள குடிநீர், சுகாதாரத் துறை, மாவட்ட ஆட்சியர் நிலையிலான குடிநீர் ஆதாரம் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தின் 12-வது பதிப்பு, இன்று காணொளி வாயிலாக நடத்தியது. ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டத்தின் செயல்பாடுகளை விரைவுபடுத்துவது, சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வது குறித்து விவாதிக்க, இதில் மூத்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை ஆணையர்கள் பங்கேற்றனர்.
குடிநீர், சுகாதாரத் துறையின் செயலாளர் திரு அசோக் கே கே மீனா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தேசிய ஜல் ஜீவன் இயக்கத்தின் கூடுதல் செயலாளரும், திட்ட இயக்குநருமான திரு கமல் கிஷோர் சோன், மாநில நீர் மற்றும் சுகாதார இயக்கம், குடிநீர், சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய குடிநீர், சுகாதாரத் துறை செயலாளர் திரு அசோக் கே கே மீனா, 'ஜல் ஜீவன்இயக்கம் 2.0'-ன் கீழ் திட்டத்தின் முன்னேற்றம், சேவை வழங்கல், நீரின் தரம், நீர் ஆதாரங்களின் நிலைத்தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்ய, மாவட்ட நீர், சுகாதார இயக்கத்தின் ஆய்வுக் கூட்டங்களை மாதந்தோறும் தவறாமல் நடத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கேகாணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2310538®=3&lang=1
***
TV/SV/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2311833)
வருகையாளர் எண்ணிக்கை : 31